மாகாளியம்மன் கோவில் 22ல் பொங்கல் விழா
திருப்பூர் : வஞ்சிபாளையம் அடுத்த முருகம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழா, 22ல் துவங்குகிறது. திருப்பூர், வஞ்சிபாளையம் (ஆர்.எஸ்.,) முருகம்பாளையத்தில், நூற்றாண்டு பழமைவாய்ந்த, ஸ்ரீமாகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு பொங்கல் திருவிழா, 22ல் துவங்குகிறது. அன்றிரவு, 9:00 மணிக்கு, பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்து, சோறு எறிதல் நிகழ்ச்சி; இரவு, 10:30க்கு, கிழக்கு பிள்ளையார் கோவிலில் இருந்து கும்பம் அலங்கரித்து, அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும், 23ம் தேதி, மாலை 5:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் மெரமனை எடுத்து வருதல் நடக்கிறது. கிராமிய கலை நிகழ்ச்சி, இரவு, 10:00க்கு துவங்குகிறது.24ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, பொங்கல், மாவிளக்கு, வாணவேடிக்கை; மாலை, 6:30க்கு, நதிக்கரைக்கு கும்பம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 25ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகளை, மாகாளியம்மன் சேவா அறக்கட்டளை, திருவிழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.