தீவனூர் கோவிலில் மார்கழி சிறப்பு பூஜை
ADDED :3581 days ago
திண்டிவனம்: தீவனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 5:30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 7:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை யும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.