திருப்புகழ் சபையினர் பக்தி பாடல் பாடி ஊர்வலம்
ADDED :3693 days ago
சேலம்: மார்கழி மாத பிறப்பையொட்டி, சேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் திருப்புகழ் சபையினர், வீதி வீதியாக பஜனை பக்தி பாடல்களை பாடி, ஊர்வலம் வந்தனர். மார்கழியில் தொடர்ந்து, 30 நாட்கள் ஒவ்வொரு பகுதியாக திருப்புகழ் சபையினர், திருப்புகழ், தேவாரம் உள்ளிட்ட பாடல்களை பாடி ஊர்வலமாக வருவர். காலை, 3 மணிக்கு துவங்கி, வீதி வீதியாக ஊர்வலமாக வந்து கோவிலில் தங்களின் பூஜைகளை முடிப்பர். நேற்று துவங்கிய ஊர்வலத்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.