உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவப் பெருமாள் கோவிவில் பிரசாத லட்டு தயாரிக்க அழைப்பு

வீரராகவப் பெருமாள் கோவிவில் பிரசாத லட்டு தயாரிக்க அழைப்பு

திருப்பூர் : வைகுண்ட ஏகாதசிக்கு, ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டு தயாரிக்க, ஸ்ரீவாரி டிரஸ்ட் அழைப்பு விடுத்துள்ளது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிவில், வைகுண்ட ஏகாதசி விழா, சொர்க்கவாசல் திறப்பு, 21ம் தேதி காலை, 5:30க்கு நடக்கிறது. பரமபத வாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், ஏழு ஆண்டுகளாக, லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டு தயாரிக்கும் பணி, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, ஸ்ரீகாமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், 19ம் தேதி காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது; 80 சமையல் கலைஞர்கள் ஈடுபட உள்ளனர்; லட்டு பிடிக்கும் பணியில் ஈடுபட விரும்பும் பக்தர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள, திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தை, 0421 - 2424 401 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !