பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோவிலில் 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு
ADDED :3582 days ago
சேலம்: பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு அன்று, பக்தர்களுக்கு வழங்க, ஸ்ரீஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில், 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. சேலம், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. டிச., 21ம் தேதி, சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. அன்று, ஸ்ரீஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு சார்பில், பிரசாதமாக லட்டு வழங்குகின்றனர். அதற்காக, 50 ஆயிரம் லட்டுகளை, அக்குழுவை சேர்ந்த, 40 பேர் தயாரிக்கின்றனர். நேற்று காலை, அந்த பணி துவங்கியது.