உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிறிஸ்துமஸ் சிந்தனை-5 தானம் செய்வீர்களா!

கிறிஸ்துமஸ் சிந்தனை-5 தானம் செய்வீர்களா!

கிறிஸ்துமஸ் வருகிறது. பணக்காரர்கள் பட்டாடைகள் எடுக்கிறார்கள். பட்டாசுகளை வாங்கி
குவிக்கிறார்கள். விதவிதமான தின்பண்டங்கள் இப்போதே வீடுகளில் தயாராகிறது. ஆனால் இந்த ஏழையை ஆண்டவர் கவனிக்கவில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கிறது.
இந்தோனேஷியாவில் ஒரு சமயம் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு
அரசு, ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து புதிய நோட்டுகளை வெளியிட்டது.
பணக்காரர்களாக இருந்த பலர், தங்களிடம் இருந்த பணத்துக்கு கணக்கு காட்ட இயலாமல் ஒரே நாளில் ஏழையாகி விட்டனர்.

பாருங்கள்... நேற்று வரை பணக்காரனாக இருந்தவன், இன்று தெருவில் பிச்சை எடுக்கும்
நிலைக்கு வந்து விடுகிறான். மனித வாழ்க்கையே இப்படித்தான். சென்னையில் ஒருநாள் வெள்ளம் எத்தனை பணக்காரர்களை மொட்டை மாடிக்கு போக வைத்தது தெரியுமல்லவா!இதைத்தான் இயேசு கிறிஸ்து, “பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும். இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை. அங்கே திருடர் கன்னமிட்டு திருடுவதும் இல்லை,” என்கிறார். தேவைக்கு போக மீதியுள்ள பணத்தை ஏழைகளும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் விதத்தில் தானம் செய்வீர்களா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !