உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச.21ல் மதுரை இஸ்கானில் பகவத்கீதை பிறந்தநாள் விழா!

டிச.21ல் மதுரை இஸ்கானில் பகவத்கீதை பிறந்தநாள் விழா!

மதுரை: மதுரை மணிநகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் பகவத்கீதை பிறந்தநாள்
விழா டிச.21ல் நடக்கிறது.வாழ்வின் உண்மை அர்த்தம் என்ன என்பதை விளக்கும் பகவத்கீதை
வேத ஞானத்தின் மணி மகுடம் என போற்றப்படுகிறது. இது 5500 ஆண்டுகளுக்கு பாரதப்போர்
நடந்த போர்க்களமான குருஷேத்திரத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜூனனுக்கு
உபதேசிக்கப்பட்டது. கீதை உபதேசிக்கப்பட்ட இந்த நாளே மார்கழி மாத மோட்ச ஏகாதசி என
கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு மதுரை இஸ்கான் கோவிலில் டிச.21 மாலை 6.00
மணிக்கு சிறப்பு பூஜை, பகவத்கீதை உரை நிகழ்ச்சி நடக்கிறது. வேதாந்த சுவாமி பிரபுபாதா
எழுதிய பகவத்கீதை மற்றும் யோகா, கீதை விளக்க புத்தகங்கள் தரப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !