பெருமாள் கோவில்களில் மார்கழி மாத பஜனை!
ADDED :3584 days ago
மரக்காணம்: மரக்காணம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் களில் மார்கழி மாத சிறப்பு
பஜனை நடந்தது.
மரக்காணம் ஒன்றியத்தில் ஆலத்தூர் வேட்டைவெங்கட்ரமணர் கோவில், மரக்காணம்
வரதராஜபெருமாள் கோவில் ஆகியவற்றில் மார்கழி மாத சிறப்பு பூஜை துவங்கியது. இதேபோல் ஆலப்பாக்கம், ஆட்சிக்காடு, பனிச்சமேடு, கீழ்பேட்டை, அனுமந்தை, காளியாங்குப்பம், செட்டிக்குப்பம், கூனிமேடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் மார்கழி
மாத சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். அனைத்து
கிராமங்களிலும் மார்கழி மாத பஜனை ஊர்வலம் நடந்தது.