உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சொர்க்கவாசல் திறப்பு: ஆர்.டி.ஓ., ஆலோசனை!

சொர்க்கவாசல் திறப்பு: ஆர்.டி.ஓ., ஆலோசனை!

சேலம்: சேலம் கோட்டை அழகிரி நாத ஸ்வாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு விழா, வரும், 21ம் தேதி, அதிகாலை, 4.30 மணிக்கு நடக்கிறது. முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, ஆர்.டி.ஓ., விஜய்பாபு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், பக்தர்களுக்கு செய்துள்ள வசதிகள் பற்றி கேட்டறிந்ததுடன், அசம்பாவிதம், குற்றச்செயல் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, போலீசார் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பு
கேமரா வசதி இருந்தபோதும், கூடுதலாக கேமரா பொருத்துவதற்கான வழிமுறை இருந்தால்,
அதையும் செயல்படுத்துவதற்குரிய முயற்சியை எடுக்க வேண்டும், என ஆர்.டி.ஓ., கேட்டுக்
கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !