உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா!

சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழா!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் லோகநாயகி தாயார் சமேத திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கலா சாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேசங்களில் 27வ துதலமான இங்கு எழுந்தருளியுள்ள உற்சவர் தாடாளன்பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

இத்தலத்தில் பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் வேண்டி வலது காலால் பூமியையும், இடது காலால் வின்னையும் அலந்து கையால் மூன்றாவதடி மண் எங்கே என கேட்டார்.தொடர்ந்து மகாபலி சக்கரவர்த்திக்கு பாதாள உலகில் மோட்சம் அளித்தார். இந்த தலத்தில் தினந்தோறும் பெருமாளின் இடது பாதசரிசனத்தை கானலாம்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொற்கவாசல் திறக்கப்படும் இன்று மட்டுமே பெருமாள் வலது பாத தரிசனத்தை கானமுடியும்.இத்தகைய சி றப்பு வாய்ந்த இந்த தலத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெ ற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.ரத்தின அங்கி அலங்காரத்தில் தாடாளன் பெருமான் எழுந்தருள பூஜைகள் மற்றும் மகா தீபாராத னை நடைபெற்றது. பூஜைகளை பத்ரி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். தொடர்ந்து சொற்க வாசல் வழியாக எழுந்தருளிய பெருமாளை சீர்காழி எம்.எல்.ஏ சக்தி, சபாநாயக முதலியால் இந்து மெட்ரிக் பள் ளி தலைமை ஆசிரியல் தங்கவேல் உள்ளிட்ட திரளாக பக்தர்கள் நராயணா, நாராயணா என்று கோஷமி ட்டவாறு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பெருமாள் வீதியுலா நடைபெற்றது.இதுபோல 108 திவ்யதேச கோயில்களில் மயிலாடுதுறை,திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர், நாங்கூர் ஸ்ரீ நாராயண பெருமாள் கோயில் உள்ளிட்ட 14 கோயில்களில் சொற்க வாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.விழ வை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படாததால் பக்தர்க ள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !