உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சபேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு நிறைவு

கச்சபேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு நிறைவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறு திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது. காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு திருவிழா, ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுவது வழக்கம். அன்று பக்தர் வேண்டுதலுக்காக கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சதந்தி விநாயகர் கோவில் முன் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி, மண் சட்டியில் தீபம் ஏற்றி வேண்டுதல் செய்யும் பக்தர்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வந்து வழிபடுவர். இந்த விழா, கடந்த மாதம் கார்த்தியை முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த திருவிழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேண்டுதல் நிறைவேற்ற தலையில் மண் சட்டி சுமந்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !