உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்ப சுவாமிக்கு திருமஞ்சனம்

அய்யப்ப சுவாமிக்கு திருமஞ்சனம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், அய்யப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் விழா, கோலாகலமாக நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், அய்யப்ப சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 5 ஆண்டுகளாக, செங்கல்பட்டு கோண்டராமர் கோவில் குளத்தில் அய்யப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும்.இந்த ஆண்டு, நேற்று பகல், 2:30 மணிக்கு, அய்யப்பசுவாமிக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, சுவாமி அலங்கரிக்கப்பட்டு, யானை மீது வைக்கப்பட்டு, ஊர்வலம் நடைபெற்றது. செங்கல்பட்டு, கோதண்டராமர் கோவிலில் இருந்து துவங்கிய ஊர்வலம், வேதாசலம் நகர், ஜி.எஸ்.டி., சாலை வழியாக, கோவிலுக்கு வந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !