உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சியில் வைகுண்ட ஏகாதசி விழா

காஞ்சியில் வைகுண்ட ஏகாதசி விழா

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் மற்றும் அஷ்டபுஜ பெருமாள் கோவில்களில், இன்று வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற இருக்கிறது. மார்கழி மாதம் வைணவ கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். இதில், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், அஷ்டபுஜ பெருமாள் கோவில்களில், இந்த விழா வெகுவிமர்சையாக நடைபெறும். இன்று, அதிகாலை 4:00 மணியளவில், உற்சவர் சொர்க்க வாசல் வழியாக கோவிலுக்குள் செல்லும் காட்சி நடைபெறும். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண, ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பர். காலை முதல் இரவு வரை சுவாமி தரிசனம் நடைபெறும்.வைகுண்ட பெருமாள் கோவிலில், மூலவர் அறைக்கு மேல் தளத்தில் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவை முன்னிட்டு, வைகுண்ட பெருமாள் கருட சேவை இன்று காலை 7:00 மணியளவில் நடைபெறும். பெருமாள் ராஜவீதிகளை சுற்றி வந்து 9:00 மணியளவில் மீண்டும் கோவிலை வந்தடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !