உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் நாளை பூச்சாட்டுதல்

மாரியம்மன் கோவிலில் நாளை பூச்சாட்டுதல்

ஈரோடு: ஈரோடு, வீரப்பம்பாளையம் மாரியம்மன் கோவில் விழா, பூச்சாட்டுதலுடன் நாளை (22ம் தேதி) துவங்குகிறது. அன்று காலை, ஆறு மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை நடக்கிறது. இரவு எட்டு மணிக்கு பூச்சாட்டுதல், வரும், 24ம் தேதி இரவு, 9 மணிக்கு கம்பம் நடுதல், 29ம் தேதி மாலை, 5 மணிக்கு காவிரி தீர்த்தம் கொண்டு வருதல், 30ம் தேதி காலை, பொங்கல் வைபவம் நடக்கிறது. இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், மாலையில் மாவிளக்கு எடுத்தல், பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !