பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை
ADDED :3902 days ago
சித்தார்கோட்டை: சித்தார்கோட்டை அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் குங்கும அர்ச்சனை நடந்தது. மூலவர் பகவதி அம்மன், பரிவார தேவதைகளுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வழிபாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரேமா பூஜைகள் நடத்தினார். 800 பெண்கள் பங்கேற்று லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.