உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுகையில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

புதுகையில் ஆடிப்பெருக்கு கோலாகலம்

புதுக்கோட்டை: ஆடிப் பெருக்கை முன்னிட்டு புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான புதுமண தம்பதிகள் பூஜைசெய்து வழிபட்ட பின் தாலிக் கயிறுகளை மாற்றிக்கொண்டனர். ஆண்டுதோறும் ஆடி 18ம் நாளில் ஆடி பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புதுமண தம்பதிகள் ஆறு, குளம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று புனித நீராடியன் பின் புத்தாடைகள் அணிந்து பூஜிக்கப்பட்ட புது தாலிக் கயிறுகளை அணிந்துகொள்வது வழக்கம். நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் உள்ள பல்லவன் குளத்தில் நேற்று அதிகாலை முதலே ஏராளமான புதுமணி தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் குவிந்தனர். குளத்தில் புனிதநீராடிய பின் புத்தாடைகள் அணிந்து பூஜிக்கப்பட்ட தாலிக் கயிறுகளை அணிந்துகொண்டனர். இதன்காரணமாக புதுக்கோட்டை பல்லவன் குளம் நேற்றுக்காலை முதல் மாலை வரை புதுமண தம்பதிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததை காணமுடிந்தது. இதுபோன்று புதுக்கோட்டை புதுக்குளம், வெள்ளாற்றின்கரை, பூசத்துறை போன்ற புண்ணிய ஸ்லங்களில் குவிந்த ஏராளமான புதுமண தம்பதிகள் பூஜிக்கப்பட்ட புது தாலிக்கயிறுகளை அணிந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !