உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

திருவரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ரிஷிவந்தியம்: திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் நிகழ்ச்சி நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோவிலில், நேற்று அதிகாலை 4:50 மணிக்கு ஆழ்வார் முன் நின்று அழைக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் சொர்க்க வாசல் வழியே அருள் பாலித்தார். தொடர்ந்து அரங்கநாதபெருமாளை பக்தர்கள் தோளில் சுமந்த படி, மைய மண்டபத்தில் வலம் வந்தனர். கோவில் உட்பிரகாரம் வலம் வந்து, ஏகாதசி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் கதிர்தண்டபாணி, ஒன்றிய சேர்மன் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், பெருமாள், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., மாலதி, ஊராட்சி தலைவர் அலமேலுபழனி, துணைத்தலைவர் குப்புசாமி, சேஷலஷ்மிகுமார், சத்தியமூர்த்தி, ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரங்கநாதபட்டாச்சியர் தலைமையிலான குருக்கள் பூஜைகளை செய்தனர். திருக்கோவிலூர் டி.எஸ்.பி., வீமராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !