கூடலூரில் ஐயப்ப விளக்கு பூஜை
ADDED :3580 days ago
கூடலுார்: கூடலுார் விநாயகர் கோவிலில், மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், ஊர்வலம், கன்னிப்பூஜை, விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. காலை, 5:00 மணிக்கு உலக அமைதி வேண்டி சிறப்பு கணபதி ஹோமம் நடந்தது. மதியம்,12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து கன்னி ஐயப்ப பக்தர்கள் நெய்விளக்கு ஏந்தி ஊர்வலம் சென்றனர். ஊர்வலம், சக்தி முனீஸ்வரர் கோவில் சென்று, நகர் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. மாலை,6:00 மணிக்கு கோவில் வளாகத்தில், சபரிமலை, குருவாயூர் கோவில், முன்னாள் மேல்சாந்தி கிருஷ்ணன் நம்பூதரி, சபரிமலை மாளிகை புரத்தம்மன் முன்னாள் மேல்சாந்தி மனோஜ் நம்பூதிரி தலைமையில், கன்னிப்பூஜையும், விளக்கு பூஜையும் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.