அரியும், சிவனும் ஒண்ணு, அறியாதவர் வாயில் மண்ணு என்பதன் பொருள் என்ன?
ADDED :3976 days ago
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற சொற்றொடரின் திரிபே இது. எங்கள் தெய்வம் உயர்ந்தது, உங்கள் தெய்வம் தாழ்ந்தது என்னும் தவறான மனப்போக்கு கூடாது என்பதை இது வலியுறுத்துகிறது. தெய்வத்தை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் வணங்கினால், பசிக்கு உணவு கிடைக்கும். தெய்வ நிந்தனை செய்தால் உணவு கிடைக்காது. மண்ணைத் தான் உண்ண நேரிடும் என்பதை இப்படிக் கூறியுள்ளனர்.