உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்கிறார்களே, ஏன்?

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்கிறார்களே, ஏன்?

நீரின்றி அமையாது உலகு என்பர். தாய் என்பவள் தனி மனிதனின் தெய்வம். தண்ணீர் உலக உயிர்கள் எல்லாவற்றிற்கும் இன்றியமையாதது. தனி மனிதன் தன் தாயைக் கோபிக்கலாம். அது தவறு என்றாலும் தாய் பொறுத்துக் கொள்வாள். தண்ணீரைப் பழித்து அது கிடைக்காமல் போனால், உலகமே பாதிக்கப்படும். இது பொதுநலம் சம்பந்தப்பட்டதால், தாயைக் காட்டிலும் தண்ணீரை உயர்த்திக் கூறியுள்ளனர். தண்ணீரின் அவசியம் கருதி உதாரணத்திற்கு தாயைக் கூறியுள்ளார்களே தவிர, தாய்மை என்பது போற்றுவதற்குரியதே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !