கண்ணாடி நடராஜர்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மார்கழி திருவாதிரையன்று கண்ணாடியில் தெரியும் நடராஜருக்கு பூஜை செய்வார்கள். இதை அருவ வழிபாடு என்கின்றனர். சிவபெருமான் ரூபம் (வடிவம்), அரூபம் (வடிவமில்லாமை), அருவுருவம் என மூன்று வடிவங்களில் அருள்கிறார். இதில் ரூபம் என்பது நடராஜர் வழிபாட்டையும், அருவுருவம் என்பது, லிங்கவழிபாட்டையும் அரூபம் என்பது வடிவமில்லாமல் வணங்குவதையும் குறிக்கும். பொதுவாக அருவுருவ வடிவில்தான் சிவன் காட்சி தருவார். மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திரத்தின்போது இந்த மூன்று வடிவங்களையும் தரிசிக்கலாம். அன்று அதிகாலையில் பூஜை நடக்கும் போது நடராஜர் (ரூபம்), கண்ணாடியில் தெரியும் பிம்ப நடராஜர் (அரூபம்), மூலஸ்தானத்தில் சுந்தரேஸ்வரர் (அருவுருவம்) ஆகிய மூவருக்கும் தீபாராதனை செய்யப்படுகிறது. இக்கோயிலில் மட்டுமே வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால் சிவபாதத்தை தரிசிக்கிற பாக்யம் பக்தர்களுக்கு கிடைக்கிறது.