இடது கையால் பூஜை!
ADDED :3976 days ago
ஈரோடு மாவட்டம், புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்து திருப்பூர் செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் கோயில் புதூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. கரிவரதராஜ பெருமாள் கோயில். இங்குள்ள இறைவனுக்கு வழிபாடு செய்திடும் அர்ச்சகர் தனது இடது கரத்தினாலேயே பூஜை செய்கிறார். அதற்குப் பரம்பரையாக வந்த செவிவழிச் செய்தி சுவையானதாகும். ஒரு முறை வலதுகை செயலற்ற நிலையிலிருந்த ஒருவர் பெருமாளுக்கு பூஜை செய்ய நேர்ந்தது. அவர் இடது கரத்தினால் அரசனுக்கு பிரசாதம் வழங்கிய போது, மன்னன் சினம் கொண்டு, தனது வாளால் அவரது தலையை வெட்ட முயல, வாள் இடதுபுறம் விழுந்து மறைந்தது. அதை தெய்வ வாக்காகக் கருதியதால், அன்று முதல் இடது கரத்தினாலேயே வழிபாடுகள் செய்வது நடைபெற்று வருகிறது.