உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரத்தில் ஆருத்ரா!

சிதம்பரத்தில் ஆருத்ரா!

சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு வைகறையில் ஆயிரங்கால் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெறும். பத்தாம் நாளான திருவாதிரைத் திருநாளில் தேர் உலா நடைபெறும். பத்து நாட்களும் நடராஜர் உலா வருவார். முதல் நாள் கொடியேற்றம், இர ண்டாம் நாள் பிரபை, மூன்றாம் நாள் சூரிய பிரபை, நான்காம் நாள் பூத வாகனம், ஐந்தாம் நாள் ரிஷப வாகனம், ஆறாம் நாள் ஆனை வாகனம், ஏழாம் நாள் கைலாச வாகனம், எட்டாம் நாள் பிட்சாண்டவர், ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா, அன்று மூலவரே தேரில் உலா வரும் அதிசயம் காணலாம். பத்தாம் நாள் அதிகாலை வேளையில், சிறுசிறு மணிகள் அசையும் வெண்சப்பரத்தில் நடராஜர் திருவீதி உலா வருவார். அப்பொழுது நடராஜர் ஆடுவது போலவே சப்பரம் அசைந்தாடி வருவது மெய்சிலிர்க்கும் காட்சி. அன்று சிறப்பு நிவேதனமாக களி படைப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !