உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சப்தவிடங்க தலங்கள்!

சப்தவிடங்க தலங்கள்!

ஆடல்வல்லானான ஈசன் எத்தனையோ முறை திருநடனம் செய்திருந்தாலும், தியாகேசர் வடிவில் அவர் புரிந்த ஏழு திருநடனங்கள் தனிச்சிறப்பானவை. 1. திருவாரூர் - வீதிவிடங்கர்- அசபா நடனம், 2. திருநள்ளாறு - நாகவிடங்கர்- உன்மத்த நடனம், 3. திருநாகை - சுந்தர விடங்கர் - அலை நடனம், 4. திருவாய்மூர் - நீலவிடங்கர் - கமல நடனம், 6. திருமறைக்காடு - புவனிவிடங்கர் - ஹம்சபாத நடனம், 6. திருக்கோளிலி - அவனிவிடங்கர் - பிரமர நடனம், 7. திருவொற்றியூர் -மாணிக்கவிடங்கர் - வகுள நடனம், திருவொற்றியூருக்குப் பதில் திருக்காறாயில் ஆதிவிடங்கரின் குக்டே நடனத்தை சேர்த்தும் சொல்வது உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !