தீபாலயம்!
ADDED :3976 days ago
ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணாநதி தீரத்தில் வாடப்பள்ளி என்ற இடத்தில் லக்ஷ்மி நரசிம்மர் கோயில் உள்ளது. இங்கு சுவாமி முகத்துக்கு நேராக ஒரு தீபம் சுடர்விட்டு பிரகாசிக்கும். திருவடிகளுக்கு நேராக மற்றொரு தீபம் பிரகாசிக்கும். அதில் திருவடிக்குக் கீழ் உள்ள தீபம் ஆடாமல் அசையாமல் ஒளிரும். முகத்துக்கு நேராக உள்ள தீபம் சுவாமியின் மூச்சுக்காற்றால் அப்படியும், இப்படியும் அலைபாயும். இதனால் இந்த கோயிலில் தீபாலயம் என்றே பெயர்.