உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாதர் கோயிலில் 1000 கால் மண்டபம்!

ரங்கநாதர் கோயிலில் 1000 கால் மண்டபம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள திருமாமணி மண்டபம், ஆயிரம் கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தில் இருப்பதோ 953 தூண்கள் தான். ஆனால் பெருமாள் எழுந்தருளும் ராப்பத்து நாட்களில் மண்டபத்தில் ஆயிரம் தூண்கள் வந்து விடும். எப்படி? வைகுண்ட ஏகாதசிக்கு ஒரு மாதம் முன்பே இந்த மண்டபத்தின் முன் பந்தல்கால் நடுவிழா நடைபெறும். 47 தென்னை மரங்களால் ஆன பிரமாண்டமான பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த 47 தென்னைமரத்தூண்களும் 953 கல்தூண்களும் சேர்ந்து ஆயிரங்கால் மண்டபமாக பூர்த்தியாகி பெருமாளை வரவேற்கத் தயாராகிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !