ஆதி சிதம்பரம்!
ADDED :3976 days ago
ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ளது உத்திரகோசமங்கை திருத்தலம். மூலவர் மங்களநாதர், அம்பிகை மங்களேஸ்வரி. சிவபெருமானுக்கு இங்கு மட்டுமே தாழம்பூ சாத்தப்படுகிறது. ஈசனின் அடி முடியைக் காண விஷ்ணுவும் பிரம்மாவும் சென்ற போது சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை என்பதை விஷ்ணு ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மா, சிவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் கூறினார். இதனால் தாழம்பூவை சிவபூஜையில் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், பிரம்மாவுக்கு பூலோகத்தில் கோயில்கள் இருக்காது என்றும் சிவபெருமான் சாபமிட்டார். பின்னர் மனம் வருந்திய பிரம்மாவும், தாழம்பூவும், ஈசனை வேண்டி இத்தலத்தில் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர். எனவேதான் தாழம்பூ இத்தல ஈசனுக்கு சாத்தப்படுவதாக தலபுராணம் கூறுகிறது. மிகப் பழமையான இத்தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.