கார்த்திகை எதிரொலி, பழநியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு!
பழநி: மார்கழி மாத கார்த்திகையை முன்னிட்டு பழநிகோயிலில் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரம் காத்திருந்து, மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். சபரிமலை சீசனை முன்னிட்டு பழநி மலைக்கோயிலுக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதேபோல மார்கழி முதல் நாளில் மாலையணிந்த முருகபக்தர்கள் தற்போதே பாதயாத்திரையாக பழநி வரத்துவங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலைக்கோயிலில் குவியத் துவங்கினர். திருஆவினன்குடி, பாதவிநாயகர் கோயில், நான்குகிரிவீதி கோயில்களிலும் பக்தர்கள் பால்குடங்கள் எடுத்துவந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். "ரோப்கார் வின்ச் ஸ்டேஷனில் மட்டும் பக்தர்கள் 2 மணி மணிநேரம் வரை காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். பொதுதரிசன வழியில் 3மணி நேரம் வரை காத்திருந்து மூலவர் ஞான தண்டாயுதபாணியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.