உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாதானூரில் சொர்க்கவாசல் திறப்பு

வாதானூரில் சொர்க்கவாசல் திறப்பு

திருக்கனுார்: வாதானுார் வேணுகோபால சுவாமி கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.திருக்கனுார் அடுத்த வாதானுார் கிராமத்தில் உள்ள சத்யபாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் 19ம் தேதி காலை 5:00 மணிக்கு திருப்பாவை பஜனையுடன் துவங்கியது.மாதம் முழுவதும் ஆண்டாள் விசேஷ திருமஞ்சன சேவை நடக்கிறது. 20ம் தேதி மாலை 4:00 மணிக்கு அதி விசேஷ தசமி திருமஞ்சன வைபவ உற்சவம் நடந்தது.21ம் தேதி காலை 4:40 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. திருமங்கலம் ஆராமுத கோமளவள்ளி சமேத பெருமாள் கோவில், செட்டிப்பட்டு லஷ்மி நாராயண பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !