துவாதசி சிறப்பு வழிபாடு: கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :3649 days ago
புன்செய்புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில், துவாதசியை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதை தொடர்ந்து சப்பர வாகனத்தில் ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் உட்பிரகாரம் வழியாக வைகுண்ட வாசலுக்கு புறப்பாடாகி அருள்பாலித்தார். இதையொட்டி மூலவர், வெள்ளி காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். திருவீதி உலாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள், தோளுக்கினியாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.