உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மச்ச அவதார அலங்காரத்தில் காரமடை அரங்கநாதர் உலா !

மச்ச அவதார அலங்காரத்தில் காரமடை அரங்கநாதர் உலா !

மேட்டுப்பாளையம்: காரமடையில் மச்ச அவதார அலங்காரத்தில் பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ராப்பத்து உற்சவம்  நடைபெறுகிறது. எட்டு நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் ஒரு அவதார அலங்காரத்தில் அரங்கநாதர் திருவீதி உலா வருவது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு மச்ச அவதார அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார். கோவிலின் உள்பிரகாரத்தில் இரவு சுவாமி வலம் வந்து, இளைப்பாறு மண்டபத்தில் எழுந்தருளினார்.  அங்கு ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர், ஸ்ரீதர் பட்டர்  ஆகியோர் பாசுரங்களை சேவித்தனர். சிறப்பு பூஜைக்கு பிறகு, சொர்க்க வாசல் திறந்ததும், மச்ச அவதார பெருமாள் சுவாமி வெளியே சென்று, திருவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூத்த அர்ச்சகர் ரகுநாத அய்யங்கார் கூறுகையில், “கோவிலில் மச்ச அவதார உருவ பொம்மை, 40 ஆண்டுக்கு முன் சிதைந்து போனது. அதன் பிறகு அந்த உருவம் செய்யாமல் இருந்தது. தற்போது ஸ்தபதி ராதாகிருஷ்ணன், கலைநயத்துடன் மச்ச அவதார உருவ பொம்மை செய்து கொடுத்தார். அதில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். இது மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !