பிற மதத்தினருக்கும் வரம் தரும் இருதய ஆண்டவர் ஆலயம்!
வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரத்தில் ரோமன் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் ஓமக்குளம் பகுதியில் அதிக அளவு வசித்து வந்தனர். இவர்கள் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எருக்கூர் கிராமத்தில் உள்ள இருதய ஆண்டவர் ஆலயத்தை பயன்படுத்தி வந்தனர். சிதம்பரம், சிலுவைப்புரம் பகுதிகளை உள்ளடக்கி 1947ல் தனி பங்காக உருவாக்கப்பட்டு இருதய ஆண்டவர் ஆலயம் கனகசபை நகரில் அமைக்கப்பட்டது. 2005ல் ஆயர் தேவதாஸ் ஆம்ரோஸ், புதிய பலிபீடம் அமைத்தும், 2011ம் ஆண்டில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புது பொலிவு பெற்றுள்ளது. சிதம்பரம் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து வரும் ருவாண்டா, கிரீஸ் போன்ற வெளிநாட்டு மாணவர்களும் இந்த ஆலயத்தில் பிராத்தனை செய்கின்றனர். இவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் 11:00 மணிக்கு ஆங்கிலத்தில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. இந்த ஆலயம் கிறிஸ்தவர்களுக்கு மட்டும்மல்லாது பிற மதத்தினருக்கும் வரம் தரும் ஆண்டவராக இருப்பது தான் சிறப்பு.