ஈஸ்வரன் கோவில் சுற்றுச்சுவர் கடைகளை இடிக்க திட்டம்
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் பகுதியில் உள்ள கடைகளை அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக, திருப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளவ. சுற்றுச்சுவரை சுற்றிலும், முன்புறமும், 13 கடைகள் உள்ளன. இதனால், கோவில் முழுவதும் மறைக்கப்படுகிறது. கடைகளை அகற்ற வேண்டும் என, பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பட்டி விநாயகர் கோவில் அருகே, கோவிலு<க்கு தேவையான மாலை, தேங்காய் பழ கடைகள் அமைக்க, ஆறு கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. மே<லும், சுற்றுச்சுவர் முழுவதும், சுவாமி களின் அவதாரம் <உள்ளிட்டவற்றுடன் கூடிய சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக , போக்குவரத்து நெரிசல் உள்ளது. இவ்வழித்தடத்தில் வரும் வாகனங்கள், இந்த ரோடு வழியாக, நொய்யல் ஆற்றை கடக்க வேண்டியுள்ளது. அறிவொளி ரோடு, மிஷன் வீதி என, சுற்றிலும், எட்டு ரோடுகள் உள்ள நிலையில், ஆக்கிரமிப்புகளாலும், வாகனங்கள் நிறுத்துவதாலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண, இருபுறமும் சிலாப் அமைத்து, வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், மிஷின் வீதியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, குறுக்கு ரோட்டில், சிறு பாலம் மற்றும் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், காங்கயம் ரோடு செல்லும் வாகனங்கள் ஈஸ்வரன் கோவில் வராமல், மற்ற ரோடுகள் வழியாக செல்ல முடியும். மேலும், பூ மார்க்கெட் முதல் கஜலட்சுமி தியேட்டர் ரோட்டில், பூ மார்க்கெட் பகுதி உள்ள ரோடு குறுகலாக உள்ளது. இப்பகுதியில், ரோட்டை அகப்படுத்தவும், ஆக்கிரமிப்பை அகற்றவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பணிகளோடு, ஆக்கிரமிப்பை அகற்றி, மற்ற ரோடுகளையும் போக்குவரத்துக்கு பயன்படும் வகையில் மாற்றவும், கோவிலுக்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும், பக்தர்கள் நடந்து செல்வதற்கான வசதியும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.