அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருவாதிரை விழா
ADDED :3800 days ago
அவிநாசி : அவிநாசி வட்டாரத்தில், மாங்கல்ய நோன்பு எனப்படும், திருவாதிரை விழா, நேற்று நடைபெற்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று மாலை, 4:30 மணிக்கு, கருணாம்பிகை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது; அதன்பின், கிளி வாகனத்தில் திருவாதிரை நாச்சியார், வீதியுலா வந்தார். இதையொட்டி, பெண்கள் திருவாதிரை விரதம் முடித்து, சுவாமி தரிசனம் செய்தனர். அவிநாசியில் உள்ள அனைத்து சமுதாய மண்டபத்திலும், திருவாதிரை விழா வழிபாடு, பொது விருந்து நடந்தது. வீடுகளில் பெண்கள் மாக்கோலமிட்டு, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.