உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா திருக்கல்யாண மஹோத்சவம்

தர்மசாஸ்தா திருக்கல்யாண மஹோத்சவம்

சென்னை: பூர்ணா புஷ்கலாம்பாள் சமேத தர்மசாஸ்தா, 31ம் ஆண்டு திருக்கல்யாண மஹோத்சவம், தி.நகரில் நாளை நடக்க உள்ளது.தி.நகர், வடக்கு போக் சாலையில் உள்ள, காந்திமதி கல்யாண மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தான பாகவதர், பஜனாம்ருத சாகரம் சிவசுப்ரமண்ய பாகவதர் முன்னிலையில், திருக்கல்யாண வைபவம் நிகழ்கிறது. இதை முன்னிட்டு, இன்று காலை 6:00 மணிக்கு, மஹா கணபதி ஹோமம்; காலை 8:30 மணிக்கு, பூர்ணா புஷ்கலா சமேத தர்மசாஸ் தாவுக்கு அபிஷேகம், லட்சார்ச்சனை.மாலை 6:30 மணிக்கு, விஷ்ணு, லலிதா சகஸ்ரநாம பாராயணம், பூஜைகள்; இரவு 7:30 மணிக்கு, டோலோத்சவம் முதலிய வைபவங்கள் நிகழ உள்ளன.திருக்கல்யாண நாளான, நாளை காலை 7:00 மணிக்கு, சம்பிரதாய உஞ்சவிருத்தி, காலை 7:30 மணி முதல், மதியம் 1:30 மணிக்குள், பூர்ணா புஷ்கலா சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாணம் சுபமுகூர்த்தம், மாங்கல்யதாரணம், நலங்கு, ஆஞ்சநேயர் உத்சவம் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !