சோசலே மடத்தில் இருந்து வெளியேறிய மடாதிபதி
ADDED :3940 days ago
மைசூரு" சோசலே மடத்துக்கு சொந்தமான தங்க தட்டு, வெள்ளி ரதத்தை விற்பனை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ள, ஸ்ரீவித்யா மனோகர தீர்த்த சாமியார், மடத்திலிருந்து வெளியேறினார்.மைசூரு புராதன சோசலே மடத்தின் மடாதிபதி, ஸ்ரீவித்யா மனோகர தீர்த்த சாமியார் மீது, மடத்துக்கு சொந்தமான தங்க தட்டு, வெள்ளி ரதத்தை விற்பனை செய்தது உட்பட, பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக, பல்வேறு காவல் நிலையங்களிலும், இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, ஜாமினில் வெளியே வந்துள்ள அவர், மடத்திலிருந்து வெளியேறி உள்ளார்.