உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் அம்மனுக்கு பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்!

எல்லையம்மன் அம்மனுக்கு பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலம்!

காரைக்கால்: கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் அம்மனுக்கு கிராம பெண்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக சென்று பால் அபிஷேகம் செய்தனர். காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில் நேற்று மார்கழி மாதத்தையொட்டி எல்லையம்மனுக்கு பால் குடம் எடுத்து பக்தர்கள் வழிப்பட்டனார்.பல ஆண்டுகளாக இக்கோவிலில் பக்தர்கள் நெற்றுகடன் செலுத்தி வருகின்றனர்.இதனால் நேற்று காலை 300க்குமேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பால்குடம் எடுத்த கிளிஞ்சல்மேட்டில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக எல்லையம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !