தாண்டேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!
ADDED :3597 days ago
மடத்துக்குளம்: மடத்துக்குளம் கொழுமம் தாண்டேசுவரர் கோவிலில் நடந்த ஆருத்ராதரிசனம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே கொழுமத்தில் தாண்டேசுவரர் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி நடந்தது. தாண்டேசுவரசாமிக்கும், சிவகாமி அம்மனுக்கும் திருக்கல்யாணமும், தொடர்ந்து திருவாதிரை நட்சத்திரத்தில் நடந்த ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின், சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் இடம்பெற்றன.