உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி பஞ்சவடி கோவிலுக்கு பாதயாத்திரை

புதுச்சேரி பஞ்சவடி கோவிலுக்கு பாதயாத்திரை

புதுச்சேரி: புதுச்சேரி வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூடம் சார்பில் பஞ்சவடீ கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். உலக அமைதிக்காக வைத்திக்குப்பம் பஜனை கூடத்தில் இருந்து துவங்கிய பஜனை மற்றும் பாதயாத்திரைக்கு சாரியார் சுவாமிகள் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். ஆடிட்டர் கணேசன், கவுரவ தலைவர் மதிவாணன், வேலாயுதம், இளங்கோவன், வெங்கடேசன், மனோன்மணி ராகவன்,சண்முகம், துரைராஜ், கந்தன்நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கோரிமேடு, திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு வழியாக பஞ்சவடீயை அடைந்தது. பாதயாத்திரைக்கான ஏற்பாடுகளை பிரகாஷ், ஜெயங்கொண்டான் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !