உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஷ்வரமும்! ராமபக்தனும்!

ராமேஷ்வரமும்! ராமபக்தனும்!

ராவணனை வதம் செய்துவிட்டு சீதையை மீட்டு வந்த ஸ்ரீராமர், தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் விலக ராமேஸ்வரம் கடற்கரையில் யாகம்  செய்ய முயன்றார். அவரது வழிபாட்டுக்கு சிவலிங்கத்தை எடுத்துவர கைலாயம் சென்ற ஆஞ்சநேயர், திரும்பி வர காலதாமதம் ஆனதால் சீதையே  கடல் மண்ணால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினாள். 2. அந்த லிங்கத்தையே ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்தார். அப்போது சிவலிங்கம் எடுத்துவரச்  சென்ற ஆஞ்சநேயர் இரு லிங்கங்களுடன் திரும்பி வந்தார். சீதை உருவாக்கிய லிங்கத்தை ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்துவிட்டதால் ஆஞ்சநேயர்  கொண்டு வந்த சிலைகள் வேறு வேறு இடங்களில் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டன. ராமேஸ்வரம் கோயில் மூலஸ்தானத்தில் உள்ள சிவலி ங்கம்தான் சீதை உருவாக்கிய லிங்கம். ஆஞ்சநேயர் கொண்டு வந்த ஒரு லிங்கம் கோயிலுக்குள்ளும், மற்றொரு லிங்கம் கோயிலின் முன் பகுதியி லும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்களால் வழிபடப்பட்டு வருவதை இன்றும் நாம் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !