உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகணம் உண்டாவது ஏன்?

கிரகணம் உண்டாவது ஏன்?

பொதுவாக கிரகணம் இரண்டு வகைப்படும். ஒன்று சூரிய கிரகணம், மற்றொன்று சந்திர கிரகணம். பாற்கடலைக் கடையும் பொழுது அமுதம்  கிடைத்ததாக புராணங்கள் சொல்கின்றன. அந்த அமுதத்தை தேவர்களும், அசுரர்களும் உண்பதற்காக போட்டி போட்டனர். இதனைக் கண்ட திருமால்  மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அந்த அமுதத்தை படைக்க முற்பட்டார். அசுரர் குலத்தைச் சேர்ந்த ராகு, தேவர் உரு வம் கொண்டு ராஜ கிரகங்களான சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் அமர்ந்தார். இதனைக் கண்டு பிடித்த சூரிய சந்திரர்கள் திருமாலிடம்  தகவலைத் தெரிவித்தனர். இதனால் மிகுந்த கோபம் கொண்ட திருமால் தன்னுடைய அகப்பையால் ராகுவின் தலையில் அடித்தார். அவரின்  தலையும், உடலும் தனித் தனியாக விழுந்தது. பிறகு பாம்பு உடலும், மனிதத் தலையும் கொண்டவராக ராகு மாறினார்.

அமுதத்தை உண்டதனால் ராகு சாகாமல் வளர்ந்தார். ராகுவை அசுரர் என அடையாளம் காட்டியதால், சூரிய சந்திரர் மீது ராகுவிற்கு பகை தோன்றி யது. இவர்கள் இருவரையும் பிடிக்க தொடங்கினார். அந்த அடிப்படையிலேயே இன்றும் கிரகணம் நடைபெறுவதாக ஐதீகம். காட்டிக் கொடுத்த சந் திரனை ராகுக்கோள் அதாவது கரும்பாம்பு பற்ற சந்திர கிரகணமும், சூரியனை கேதுக்கோள் அதாவது செம்பாம்பு பற்றி சூரிய கிரகணமும்  நிகழ்வதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !