தித்திக்கும் விதத்தில் திருமணம் முடிய திருப்பள்ளி எழுச்சி!
ADDED :3970 days ago
மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை நோன்பினை பெண்கள் கொண்டாடுவது வழக்கம். அதிகாலை 4 மணிக்கு எழுந்து; கன்னிப் பெண்கள் நீராடி, கோலமிட்டு, வழிபாடு செய்ய கோயிலிற்கு சென்று திருவனந்தல் நேரத்தில் சிவ வழிபாடும், நடராஜர் வழிபாடும் செய்து திருப் பாவை, திருவெம்பாவை பாடினால் இறைவனின் அருட்பார்வை கிடைத்து அதிவிரைவில் திருமணம் முடிவடையும் வாய்ப்பு கிட்டும். சூடிக் கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாள் இந்த நோன்பினை கொண்டாடித்தான் இறைவனை மணந்ததாக புராணங்கள் சொல்கின்றன. காக்கும் கடவுளான விஷ்ணுவை ஆண்டாள் மணந்ததுபோல், பார்க்கும் மாப்பிள்ளையை பாவையர் மணக்க இந்தப் பாவை நோன்பு பலன் தரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.