ஆடி, புரட்டாசி, மார்கழி மாதங்களை ஏன் ஆகாத மாதங்கள் என்கிறோம்?
ADDED :3970 days ago
ஆடி மாதத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் இடையே போர் மூண்டது. ராவணன் கொல்லப்பட்டான். மேலும், இந்த மாதம் தேவர்கள் உறங்கும் காலம் என்பதால், அந்த மாதத்தில் சுபகாரியங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்கிறார்கள். மன்மதனை ஈசன் எரித்ததால் புரட்டாசியி லும், பாரதப்போர் நடந்ததால் மார்கழியிலும் சுபகாரியங்களை நாம் செய்வது இல்லை. இந்த மாதங்களில் இறைவனை போற்றி வழிபட வேண்டுமே தவிர, சுபகாரியங்கள் செய்யக் கூடாது.