உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலிவாகனத்தில் ஐயப்பன்சுவாமி உலா !

புலிவாகனத்தில் ஐயப்பன்சுவாமி உலா !

சோழவந்தான்: சோழவந்தான் ஐயப்பன்சுவாமி கோயிலில் மண்டலபூஜையை முன்னிட்டு புலிவாகனத்தில் எழுந்தருளிய ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர்.  இக்கோயிலில் நேற்று முன்தினம் நடந்த மண்டலபூஜையில் யாகபூஜை நடந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க பல்வேறு அபிஷேக,தீபாராதனைகள் சுவாமிக்கு நடந்தது. நேற்று இரவு 10 மணிக்கு பலவண்ண மின்விளக்கு,மலர்களால் அலங்கரித்த சப்பரத்தில் புலிவாகனத்தில் ஐயப்பன் ரத வீதிகளில் எழுந்தருள, பக்தர்கள் பூஜை செய்து அருள்பெற்றனர்.  அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் கருவீரபத்திரன், நிர்வாகிகள் சேகரன், நாராயணன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !