உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நள சரித்திரம் கேட்டால் சனி தோஷம் விலகும்!

நள சரித்திரம் கேட்டால் சனி தோஷம் விலகும்!

பெ.நா.பாளையம் :“நள சரித்திரம் கேட்டால், சனி தோஷம் விலகும்,” என, திருச்சி கல்யாணராமன் பேசினார்.கோவை மருதமலை ரோடு, நியூ தில்லை நகர், ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் கோவை பக்தி சொற்பொழிவு மன்றம் சார்பில், வில்லிபாரதம் சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது: பஞ்ச பாண்டவர்கள் கானகம் வந்தனர். வியாசமுனிவர் நள சரித்திரம் கூறினார். நளன், தமயந்தி யை மணந்தார். நளன் செய்த சிறு தவறால் சனி பகவான், நளனை பிடித்தார். புஷ்கரனோடு சூதாட்டம் ஆடிய நளன், எல்லாவற்றையும் இழந்து கானகம் வந்தார். மனைவி தமயந்தியையும் பிரிந்தார். நாராயண நாமாவை ஒருவன் சொல்லவில்லை என்றால் எப்படி கஷ்டம் வரும் என்பதற்கு நளன் ஒரு உதாரணம். தமயந்தி தாய்வீடு அடைந்தாள். நளன், அயோத்தி மன்னனிடம் தேரோட்டியாக பணியில் சேர்ந்தார். பல்வேறு இன்னல்களுக்கு பிறகு தமயந்தியை கண்டுபிடித்தார்.

இறுதியில், நளன், தமயந்திக்கு காட்சியளித்த சனி பகவான், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று நளனிடம் கேட்டார். சனி பகவானாகிய நீங்கள் பிறரை பிடித்து இருக்கும் போது, அவர்கள் என் கதையான நளச்சரித்திரம் கேட்டால், அவரை விட்டு, நீங்கள் விலகி விட வேண்டும் என்றார். ஏழரை, அஷ்டம, சனி திசை உள்ளவர்கள் நள சரித்திரத்தில் நளன், தமயந்தி, கார்கோடகன், ருதுபன்னன் ஆகியோர் பெயரைக் கேட்டால் சனி தோஷம் விலகும்.இவ்வாறு, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.வில்லிபாரதம் தொடர் சொற்பொழிவு ஜன., 14 வரை தினமும் மாலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணிவரை நியூ தில்லை நகர் ஆர்.பி.எம்., வித்யாலயத்தில் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !