கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :3676 days ago
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், திருவாதிரையை ஒட்டி நடந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், திருவாதிரையை ஒட்டி நடராஜர், சிவலோகநாயகி உற்சவ சிலைகளுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் நடந்தன.இதில், அனைத்து வகையான கனிகள் மற்றும் 16 வகையான பொருட்களைக்கொண்டு அபிசேக பூஜை செய்யப்பட்டது. பின், நடராஜர், சிவலோகநாயகி சிலைகளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திருவாதிரையை ஒட்டி சுமங்கலி விரதம் இருந்த பெண்கள் மற்றும் கிராமமக்கள் சிவலோகநாதரையும், சிவலோகநாயகியையும் வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.