உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிமலைவாசன் அய்யப்ப குழுவினர் வழிபாடு: பெண்களே அபிஷேகம் செய்யும் வாய்ப்பு

கரிமலைவாசன் அய்யப்ப குழுவினர் வழிபாடு: பெண்களே அபிஷேகம் செய்யும் வாய்ப்பு

பெங்களூரு: பெங்களூரு கரிமலைவாசன் அய்யப்ப குழுவினரின், 32வது ஆண்டு அய்யப்ப வழிபாடு, ஜன., 1ம் தேதி நடக்கிறது.பெங்களூரு கரிமலைவாசன் குழுவினர், ஆண்டுதோறும் புத்தாண்டு நாளில், அய்யப்ப வழிபாடு, சுமங்கலி பூஜை நடத்தி வருகின்றனர். 32வது ஆண்டாக, ஜன., 1ம் தேதி, பெங்களூரு ஹலசூரு ஏரி எதிரிலுள்ள கல்லஹள்ளி மைதானத்தில், காலை, 9:45 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் விழா துவங்குகிறது.அய்யப்பனுக்கு, காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை அபிஷேகம் நடக்கிறது. பெண்களும், பக்தர்களும் அய்யப்பனுக்கு தங்கள் கைகளால் தாங்களே அபிஷேகம் செய்வர்.காலை, 11:00 மணி முதல், 12:00 மணி வரை, சுமங்கலி பூஜை நடக்கிறது. திருமணமாகாத இளம் பெண்கள், தங்கள் திருமணம் விரைவில் நடக்க வேண்டியும், திருமணமான பெண்கள், தாங்கள் நீண்ட காலம் சுமங்கலியாக வாழ வேண்டியும், 108 குத்துவிளக்கு முன் அமர்ந்து, வழிபாடுகளை நடத்துவர்.பகல், 12:30 மணிக்கு, 18வது ஆண்டாக சபரிமலை யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு, குரு தீட்ஷை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஸ்ரீதரன் குருசாமி, சங்கர் குருசாமி குழுவினர் அய்யப்ப பஜனை பாடல்கள் பாடுகின்றனர். பூஜைகள் அனைத்தும், தமிழ் வேத மந்திரங்களால் சுகுமாறன் குருசாமி நடத்துகிறார். பூஜைகளுக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு மாங்கல்ய கயிறுடன் கூடிய பிரசாதமும்; மற்ற பக்தர்களுக்கு ருத்ராட்சையும், சமபந்தி உணவும் வழங்கப்படுகிறது. அய்யப்ப பக்தர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு, கரிமலைவாசன் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !