உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் கூட்டு வழிபாடு
ADDED :3730 days ago
கீழக்கரை: திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாஸ்ரமம் சார்பில் உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயிலில் தாயார் சன்னதி முன்பு உலக நன்மைக்கான கூட்டுவழிபாடு நடந்தது. ரமண மகிரிஷியின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து அருணாசல அட்சரமணமாலை, 108 கன்னிகள் பாராயணம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை பொறுப்பாளர் சிரஞ்சீவி செய்திருந்தார். ஆருத்ரா தரிசனத்திற்கு வந்த ஏராளமான பக்தர்கள் அதில் பங்கேற்றனர். அனைவருக்கும் ரமணர் படம் வழங்கப்பட்டது.