வக்ரகாளியம்மன் கோவிலுக்கு 1008 பால்குட ஊர்வலம்
ADDED :3581 days ago
திருக்கனுார்: திருவக்கரை வக்ரகாளியம்மன் வழிபாடு நற்பணி மன்றம் சார்பில் 16ம் ஆண்டு 1008 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது.ஊர்வலத்தை துணை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். பால் ஊர்வலம், திருக்கனுார் முத்து மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து பொதுமக்கள் 1008 பால்குடத்துடன் புறப்பட்டு சித்தலம்பட்டு, புதுக்குப்பம், கொடுக்கூர் வழியாக திருவக்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று, வக்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள் துரைராஜன், ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.