சிந்தாதிரிப்பேட்டை அய்யப்ப சுவாமிக்கு விளக்கு பூஜை
ADDED :3581 days ago
சிந்தாதிரிப்பேட்டை: ஸ்ரீ சபரிமலா வாசன் அய்யப்பன் சேவா சங்கம் சார்பில், 11ம் ஆண்டு விளக்கு பூஜை நேற்று சிந்தாதிரிப்பேட்டை, கலவை தெருவில் நடைபெற்றது. இதை முன்னிட்டு அய்யப்ப சுவாமிக்கு, ருத்ராட்சம் கலந்த வண்ண மலர் மாலையால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. இரவு 9:00 மணியளவில் அய்யப்ப சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அகல் விளக்கை ஏந்தி வலம் வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.